திரு. தா.பாண்டியன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். (4/4)
அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர். (2/4)
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். (1/4)
அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.(2/2)
14வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களை அழைத்து பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும். (1/2)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 3.03.2021 முதல் 10.03.2021 வரை தலைமைக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். https://t.co/nBawh3tmto
அம்மா அவர்களின் வழியில் தமிழகம் உயர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் இந்த நன்னாளில் உறுதியேற்றிடுவோம்!
ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் சக்தி, நம் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில், அவர்களை வணங்கி மகிழ்கிறேன். https://t.co/JNS7YHAEQJ
தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில்
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்காதது ஏமாற்றம் தருகிறது! https://t.co/zAGFnrmt42
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி மகிழ்ந்திடுவோம்! தி.மு.கவை தலையெடுக்கவிடாமல் செய்து தமிழகத்திற்கு புதிய விடியலை ஏற்படுத்திட உறுதி ஏற்றிடுவோம்! https://t.co/JshagmT9oQ
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது. https://t.co/8e9t35l2Bv
CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது. (1/2)
இவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து,ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி இருக்கிறது. இந்த நிலையை உணர்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.(2/2)